நாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்கக்கோரி 100 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்…!

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், மாநகராட்சி மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு தடவை முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நாகர்கோவில் மாநகர தி.மு.க. சார்பில் 100 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதாவது, தி.மு.க.வினர் முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் தெரு சந்திப்புகள் ஆகியவற்றில் கட்சி கொடிகளுடனும், கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன் திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் தில்லைச்செல்வம், சேக்தாவூது, மணிமாறன், சீயோன், ஜெகன், அலோசியஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இருளப்பபுரம் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் மால்ட்டன், மணி, லீனஸ், சிவசந்திரசேகர், நாகப்பன், கிஷோர் பால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் மணி அடிச்சான் கோவில் சந்திப்பில் நாஞ்சில் ராஜ் தலைமையில் தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். வடசேரி அண்ணா சிலை சந்திப்பில் முன்னாள் கவுன்சிலர் சாகுல்ஹமீது, பெதஸ்தா காம்ப்ளக்ஸ் அருகில் சைமன்ராஜ், காமராஜபுரத்தில் வேல்முருகன், பார்வதிபுரத்தில் ராஜ்குமார், கிறிஸ்துநகரில் ஜவகர்,

வேப்பமூடு சந்திப்பில் எம்.ஜே.ராஜன், புனித சவேரியார் பேராலய சந்திப்பில் பெஞ்சமின், பறக்கை ரோடு சந்திப்பில் சிவராஜ், பெரிவிளை சந்திப்பில் சதாசிவம், செட்டிகுளம் சந்திப்பில் ராஜபக்தன், ராமன்புதூர் சந்திப்பில் நவீன், குருசடி சந்திப்பில் அமலராஜா, புன்னைநகர் சந்திப்பில் முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், சோபின் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மேலும் நகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

Leave a Reply