தோவாளையில் பாலப்பணியை விரைவாக முடிக்கக்கோரி தி.மு.க ஆர்ப்பாட்டம்…!

தோவாளை தேவர்நகர் அருகே முக்கிய சாலையின் குறுக்கே செல்லும் சிறிய பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு பகுதியில் கட்டுமான பணியும், மறு பகுதியில் போக்குவரத்தும் நடந்து வருகிறது.

இந்நிலையில் பாலப்பணி கடந்த 1 மாதத்திற்கு மேலாக நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை தோவாளை ஒன்றிய தி.மு.க.வினர் பாலம் பகுதியில் திரண்டனர். பின்னர், அவர்கள் பாலம் பணியை விரைந்து முடிக்கக்கோரி திடீரென முடிவடையாமல் உள்ள பாலத்தின் மீது நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி துணை தலைவர் தாணு, ஊராட்சி தி.மு.க செயலாளர் கருணாநிதி, நிர்வாகிகள் செல்வன், லெட்சுமணன், ரவீந்திரன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பாலப்பணியை விரைந்து முடிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply