கல்குளம் தாலுகா அலுவலகம் முன் பிஎம்எஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை எழுப்பும் நிகழ்ச்சி…!

கல்குளம் தாலுகா அலுவலகம் முன் பிஎம்எஸ் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை எழுப்பும் நிகழ்ச்சி நடந்தது.12 மாதங்களாக வழங்காமல் இருக்கும் ஓய்வு ஊதியத்தை வழங்கக்கேட்டும், நலவாரியங்களை முடக்கி தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கக்கூடாது எனவும்,

அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கக் கேட்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டு கோரிக்கை எழுப்பும் நிகழ்ச்சியில் தக்கலை ஒன்றிய தலைவர் ராஜகுமார் செயலாளர் செல்வராஜ் மாவட்ட அமைப்பாளர் முருகன் துவக்கி வைத்தார்.

நிர்வாகிகள் வினு, ராமச்சந்திரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முருகேசன் நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

Leave a Reply