மாதவலாயம் ஊராட்சியில் ரூ.9 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆஸ்டின் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்…!

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோவாளை ஊராட்சி ஒன்றியம் மாதவலாயம் ஊராட்சி மைதீன்புரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆஸ்டின் எம்.எல்.ஏ.விடம் தங்கள் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ., மைதீன்புரத்தில் புதிதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் தொ.மு.ச. மாநில பொதுச்செயலாளர் பாரூக், தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், மாதவலாயம் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினா ராஜேஷ், தி.மு.க. ஊராட்சி செயலாளர் ரகுமான், ஊராட்சி துணை தலைவர் பீர்முகமது, மாதவலாயம் ஊர் ஜமா அத் தலைவர் காஜாமைதீன், செயலாளர் காதர்ரகுமான், ராஜேஷ், லாயம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாகின், கபீர், இபாசத்நிஷா, ஜூனைதா, செய்யது புகாரி, மகபீர், மைதீன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply