தக்கலை அருகே 53 பவுன் நகை- ரூ.3 லட்சத்துடன் இளம்பெண் கடத்தல் கணவர் போலீசில் புகார்…!

தக்கலை அருகே மூலச்சல் கிறிஸ்துநகரை சேர்ந்தவர் ஜாஸ்பர்சிங் (வயது 38). இவர் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் அரபு நாட்டில் வேலை பார்க்கிறேன். எனக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உண்டு. என் மனைவி நடன பயிற்சி ஆசிரியராக உள்ளார். அரபு நாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை என் மனைவிக்கு அனுப்பி வந்தேன். இந்த நிலையில் நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபு நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினேன். பின்னர் வீட்டுக்கு சென்றுபார்த்த போது என் மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை.

இதுதொடர்பாக என் உறவினர்களிடம் விசாரித்தேன். அப்போது என் மனைவி, குழந்தைகளை 53 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்துடன் தக்கலை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி வைத்துள்ள விவரம் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட வாலிபர் என் மனைவியை ஒரு பெண் உதவியுடன் கடத்தியுள்ளார்.

எனவே என் மனைவி மற்றும் குழந்தைகளையும் மீட்பதோடு நகை மற்றும் பணத்தையும் மீட்டு தரவேண்டும். அதோடு சம்பந்தப்பட்ட வாலிபர், பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply