அகில பாரத இந்துமகா சபா கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுக்குழு கூட்டம்…!

அகில பாரத இந்துமகா சபா கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நாகர்கோவில் மேலசூரன்குடி அலுவலகத்தில் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் 2 வித தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் புன்னைநகர் பகுதியில் திருச்செந்தூர் முருகன் கோவிலிக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்ய நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அகில பாரத இந்துமகா சபா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாநகர நிர்வாகிகளை புதிதாக தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இதில் விருந்தினராக மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியன் ஜீ கலந்து கொண்டார்,மாநில செயலாளர். பொன்.வெற்றிவேலாயுத பெருமாள் தலைமை தாங்கினார்,மற்றும் கட்சியின் நிர்வாகிகள்,புதிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply