நாகர்கோவிலில் கார் வேன் டயர் சகதியில் புதைந்தது…!

குமரிமாவட்டம் நாகர்கோவிலில் இன்று காலை வெட்டூணிமடம் – வடசேரி செல்லும் சாலையில் கார் ஒன்று சாலையில் அருகே பார்கிங் செய்த போது பள்ளதில் சிக்கியது. மழைப்பெய்த தண்ணீர் பள்ளத்தில் தேங்கி இருந்த நிலையில் டிரைவரின் கவனக்குறைவால் காரின் டயர் மாட்டிக்கொண்டது.உடனே நண்பர்களின் உதவியோடு காரை பள்ளத்தில் இருந்து எடுத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பார்வதிபுரம் மேம்பாலம் செல்லும் பால்பண்ணை ரோட்டில் வேன் ஒன்றின் டயர் சாலை அருகே சகதியில் புதைந்தது. இதனால் வேனில் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல வந்தவர்கள் திடீர் தடங்களால் பரிதவித்தனர்.உடனே அக்கம்பக்கத்தினர் அழைத்து அவர்களின் ஒத்துழைப்போடு வண்டியை பிடித்துதள்ளி பள்ளத்தில் இருந்து தூக்கி விட்டனர். பின்னர் உடனே மகிழ்ச்சியாக நிகழ்ச்சிக்கு சென்றனர்..

Leave a Reply