குமரி மாவட்டத்தில் போலீசார் அதிரடி வாகன சோதனை 2 நாட்களில் 1,442 பேர் மீது வழக்கு…!

கொரோனா பரவலால், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் குமரி மாவட் டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். மேலும் பொது போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப் பட்டதால், மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன.

தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக் கப்பட்டுள்ளது. இதனால், குமரி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் விபத்துக்களும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், ஹெல்மெட் அணி யாமல் மோட்டார் சைக்கிளில் செல்வது, காரில் சீட்பெல்ட் அணியாமல் இருப்பது, ஒரு வழிப்பாதையில் வாகனங் களை இயக்குவது போன்ற போக்குவரத்து விதி முறை களை மீறுபவர்கள் மீது நட வடிக்கை எடுக்குமாறு போலீ சாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் முதல் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் நேற்று முன்தினம் விதிமுறைகளை மீறியதாக நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி மற்றும் குளச்சல் ஆகிய 4 சப்-டிவிஷன்களில் மொத்தம் 394 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டு அபராதம் விதிக் கப்பட்டது. இதில் அதிகபட் சமாக நாகர்கோவில் சப்- டிவிஷனில் மட்டும் 214 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் நேற்றும் மாவட்டம் முழுவதும் போக்கு வரத்து விதிமுறைகளை மீறியதாக 1,048 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட வாக னங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் வாகன சோத னையை தீவிரப்படுத்த உள்ள தாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2 நாட்களில் குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 1,442 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply