நாகர்கோவில் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…!

நாகர்கோவில் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பதவி ஏற்கும் விழா நேற்று நாகர்கோவில் வக்கீல் சங்கத்தில் நடந்தது. இதற்கு வக்கீல் சங்க முன்னாள் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் இணை ஆணையர் மதியழகன் புதிய நிர்வாகிகளுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

மூத்த வக்கீல்கள் ராமசாமி, பரமதாஸ், உதயகுமார், மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் முன்னாள் நிர்வாகிகளிடம் இருந்து, புதிய நிர்வாகிகள் பொறுப்புகளை ஏற்று கொண்டனர். புதிய தலைவராக மரிய ஸ்டீபன், செயலாளராக டி.கே.மகேஷ், பொருளாளராக விஸ்வராஜன், துணைத்தலைவராக பிரதாப், நூலகராக செந்தில் மூர்த்தி, இணைச்செயலாளர்களாக பெருமாள், பிரேம் சோபியாவிஜி, நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஞானசீலன், கணேஷ், ஜெபார்லின், மகிழா, வேலம், ஆல்பர்ட் ஜெபிரி வில்சன், புரூனோ ரஞ்சித் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகளை மூத்த வக்கீல்கள் ரத்தினசாமி, அரிகரன், முன்னாள் தலைவர் ஜோசப் பெனடிக்ட், சிதம்பர தாணுபிள்ளை, நெல்லை வக்கீல் சங்க தலைவர் சூரிய நாராயணன், சுசீலா தேவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

வக்கீல் சங்க புதிய தலைவர் மரிய ஸ்டீபன் தலைமையில் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் மகிளா கோர்ட்டு, குடும்பநல கோர்ட்டு, போக்சோ கோர்ட்டு, நிரந்தரலோக் அதாலத், பத்மநாபபுரம் கோர்ட்டு கூடுதல் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

கீழமை கோர்ட்டுகளில் உதவி குற்றவியல் அரசு வக்கீல்களை நியமனம் செய்ய வேண்டும். கோர்ட்டு பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மை வளாகம் ஒன்றை மாநகராட்சி சார்பில் கட்டித்தர வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply