சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. அறிக்கை…!

குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் என்ற பெயரில் குடிநீர் வடிகால் வாரியத்தினர், புதிதாக போடப்பட்டுள்ள சாலைகளை தோண்டி குழாய்கள் பதித்து வருகின்றனர். சில பகுதிகளில் குழிகளை தோண்டி பல மாதங்கள் ஆகியும் குழாய்கள் பதிக்கப்படவில்லை.

இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் பல பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மண்போட்டு மூடப்படவில்லை. இதனால் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் மூடப்படாமல் இருக்கும் குழிகளை மூடி, சாலைகளை சீரமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், மிக விரைவில் மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply