குமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…!

கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை முடங்கி வாழ்வாதாரத்தை இழந்த கட்டுமான தொழிலாளர்களின் நிலுவை கேட்பு மனுக்களுக்கு பணபயன் வழங்கவும்,தேக்கி வைத்துள்ள 13 ஆயிரம் நலவாரிய அட்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்க கேட்டும்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டுகொள்ளாத நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர், சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளை கண்டித்து குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டமானது தோழர்.K. செல்லப்பன்(மாவட்ட தலைவர்)தலைமையில் நடைப்பெற்றது.

தங்கமோகன்(CITU),சிங்காரன்(CITU),அந்தோணி முத்து மற்றும் பெண்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்..

Leave a Reply