கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது…!

தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கு குமரி மாவட்டத்தில் 11 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலை வகித்தார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, வெள்ளிபதக்கம் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகைக் கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.

விழாவில், கார்மல் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் அருள்ராஜன், கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிகண்டன், நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நல்ல பாக்கியலெட், கோட்டார் புனிதசேவியர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை கலைச்செல்வி, உதயமார்த்தாண்டம் அரசு உயர்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை மேரி மெசபெல், கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜான் ஹார்ட்டன்,

வடசேரி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரெட்லின் பேபி, திருநந்திக்கரை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி மல்லிகா, உதயமார்த்தாண்டம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி ஜெசிந்தாள், வில்லுக்குறி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை தமிழ்செல்வி, நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயசந்திரன் என்கிற சந்துரு, மாவட்ட கல்வி அதிகாரி (நாகர்கோவில்) மோகனன்,

வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜெயசந்திரன், ஹரிகரன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பரமேஸ்வரன், தோவாளை ஊராட்சி ஒன்றியத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட கூட்டுறவு நூற்பாலைத் தலைவர் சகாயராஜ், புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் சாம்ராஜ், சுகுமாறன், யூஜின் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply