இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்
(08-09-2020 ) செவ்வாய்கிழமை
நல்ல நேரம் காலை 07.45 மணி முதல் 08.45 வரை
பிற்பகல் 01.45 மணி முதல் 02.45 வரை
ராகு காலம் பிற்பகல் 3.00 மணி முதல் 04.30 வரை
எமகண்டம் காலை 09.00 மணி முதல் 10.30 வரை

மேஷம்

இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும்.

ரிஷபம்

ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும். முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் பலன்கள் உண்டு.

மிதுனம்
இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியும் அன்பும் அளிப்பார்கள்.

கடகம்

இன்று உங்கள் கைகளில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும், அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்

வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். இந்த நாள் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். இன்று உடனடி கவனம் செலுத்த வேண்டிய பிரச்னைகள் இருக்கும்.

கன்னி

நிதி நிலைமை மேம்படும். சிலர் தங்களால் செய்ய முடிவதற்கும் மேலாக வாக்குறுதி தருவார்கள். கிடைக்கும் ஆலோசனைகளைப் புறந்தள்ளாதீர்கள். இன்று உங்கள் வியாபாரத்தில், சில முக்கியமான முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள்.

துலாம்

உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதல் ஏற்படும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை சரி பாருங்கள். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள்.

தனுசு

உங்களுடைய நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பொறுமை குறைவாக இருக்கும், அதனால் பேச்சில் கவனமாக இருங்கள்.

v

மகரம்

தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள். யாராவது பிரச்னைகளுடன் உங்களை அணுகினால். அவர்களைப் புறக்கணித்திடுங்கள்.

கும்பம்

அதிக மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தால், குழந்தைகளுடன் சிறிதுநேரம் செலவிடுங்கள். உங்கள் கருணைக்கும் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் வெகுமதி கிடைக்கும். இல்லத்தில் அன்பு அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை அகலும்.

மீனம்

உங்கள் வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நட்பு, இன்று கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

Leave a Reply