சென்னையில் மீண்டும் மெட்ரோ ரயில் ஓடியது…! பயணிகளுடன் அமைச்சர் பயணம்…!

சென்னையில் இன்று காலை முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இருக்கிறது. இதில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பயணிகளுடன் அமர்ந்து பயணித்தார்.

கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த ஐந்து மாதங்களாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கின் தளர்வுகளில் இன்று 7.9.2020 முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்று கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை 7 மணி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இருக்கிறது. இரவு 8 மணி வரையிலும் இந்த சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதை முன்னிட்டு தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பயணிகளுடன் அமர்ந்து பயணித்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலும் அவர் பயணிகளுடன்பயணித்தார். அவருடன் மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் பயணித்தனர்.

ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசலால் கொரோனா தொற்று பரவாமல் இருக்க, சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனா குறித்த விளக்கங்கள் அளிப்பதற்கும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும் அறிவுறுத்த ஒவ்வொரு நிலையங்களிலும் இதற்கெனவே 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அலுவலக நேரங்களில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் பத்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் என்ற கணக்கில் இயக்கப்படுகிறது.

Leave a Reply