குமரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது…!

குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒரு வாரத்திற்கு நடைபெறும். எனவே பொதுமக்கள் அரசு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தேவைப்படும் தகவல்களை முறையாக தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் சொல்ல வேண்டிய தகவல்களை மறைத்தால் அதன் மூலம் தங்களுக்கு தாங்களே கெடுதல் விளைவித்து கொள்வது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று பரவ அது காரணமாக அமைந்து விடும் என்பதை மனதில் கொண்டு முழுமையான விவரங்களை சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply