குமரிமாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு…!

பிரதம மந்திரியின் வேளாண்மை கிஸான் சாமான் உதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு பணத்தை பெற்று தந்து கோடிக்கணக்கில் மோசடி. தமிழக அரசு விசாரணை குழுவை வைத்துநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மனு.

மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

பிரதம மந்திரியின் வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9 கோடியே 50 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் என ஆண்டுக்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

ஆனால் இந்த திட்டத்தில் அரசாங்கத்தை ஏமாற்றி சில விவசாயிகள் அல்லாதவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு மோசடி நடைபெற்று வருகிறது இந்த வகையில் பல கோடி ரூபாய் மோசடி நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்தில் மோசடி குறித்து தமிழக அரசு விரிவான ஆய்வை மேற்கொண்டு எவ்வளவு ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply