கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அகஸ்தீஸ்வரத்தில் மவுன ஊர்வலம்…!

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. அகஸ்தீஸ்வரம் பிள்ளையார் கோவில் முன்பு தொடங்கிய ஊர்வலத்திற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி, பேராசிரியர் மகேஷ், வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காலபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வசந்தகுமார் எம்.பி.யின் மகன் வினோத் குமார், பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் பிள்ளையார்கோவில் சந்திப்பில் இருந்து தொடங்கி குமரிஅனந்தன் தெரு, அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை வழியாக வசந்தகுமார் எம்.பி.யின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் முடிவடைந்தது. பின்னர், கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் வசந்தகுமார் எம்.பி.யின் சமாதியில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஊர்வலத்தில் நகர காங்கிரஸ் தலைவர்கள் கிங்ஸ்லின், ஜார்ஜ் வாஷிங்டன், அரிகிருஷ்ண பெருமாள், அருள் சேவியர் ஸ்டாலின், தி.மு.க. பேரூர் செயலாளர்கள் வைகுண்ட பெருமாள், பாபு, பூவியூர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply