ஆரல்வாய்மொழியில் பலத்த மழை வீடு இடிந்து தொழிலாளி படுகாயம்…!

ஆரல்வாய்மொழி பகுதியில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலனியை சேர்ந்த செல்வம் (வயது 55) என்பவரின் வீடு மழையால் நேற்று மாலையில் இடிந்து விழுந்தது. வீடு இடியும் அறிகுறி தென்பட்டதும் செல்வத்தின் மனைவி சுதா (50), மகள் சாவித்திரி (20) ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். செல்வம் வீட்டினுள் சிக்கி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply