மலேசியாவில் மரத்தடி விழுந்து குமரி வாலிபர் பலி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை…!

கருங்கல் அருகே பூட்டேற்றி வாகப்பாடு பகுதியை சேர்ந்தவர் கமலம். இவரது மகன் அபிஷ் முருகன் (வயது 25). இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் கப்பலில் இருந்து கிரேன் மூலம் சரக்கு ஏற்றி இறக்கும் பணியில் உதவியாளராக சேர்ந்தார். சம்பவத்தன்று அபிஷ்முருகன் கப்பலில் இருந்து கிரேன் மூலம் மரத்தடிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக கிரேனில் கயிறு அறுந்து அதில் கட்டப்பட்டு இருந்த மரத்தடி அவர் மீது விழுந்தது. இதில் அபிஷ் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பூட்டேற்றியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால், அவரது உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். அத்துடன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில், கிள்ளியூர் தொகுதி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் மலேசியாவில் மரத்தடி விழுந்து இறந்த அபிஷ் முருகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply