நாகர்கோவில் கராத்தே வீரர்களுக்கு கருப்பு பட்டை வழங்கும் விழா…!

சன் ஷைன் புடோகான் கராத்தே டோஜோவின் கருப்பு பட்டை வழங்கும் விழா கருங்கல் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவில், ரென்சி சுஜின், ரென்சி சீலன் ஆகியோரிடம் முறையான பயிற்சி பெற்ற ஜெர்பின், ஜாண் பிரனோ, ஜீவ ஜெமால்சன், நாகராஜன், அருண், ரிச்சிஜோ, அபின் விஷால், கால்வின் ராபர்ட், இவான் டெபிஷோ ஆகிய மாணவர்களுக்கு தமிழ்நாடு கராத்தே புடோகான் கழக செயலாளர் கியோஷி சேவியர் டேவிட் கருப்பு பட்டை வழங்கினார்.

இதில் புனித அல்போன்சா கல்லூரி தாளாளர் ஆன்றனி ஜோஸ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். ரென்சி சீலன் வரவேற்றார். முடிவில் ரென்சி சுஜின் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ரென்சி சீலன் செய்திருந்தார்.

Leave a Reply