கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்து விட்டது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனவை கட்டுப்படுத்த அரசு தோல்வி அடைந்து விட்டதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்றே கூறலாம். நோயின் தீவிரத்தை மக்கள் உணராததாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாததாலும் கொரோனா அதிகரித்துக் கொண்டே வருவதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. அதே போல, மக்களின் நலன் கருதியே தளர்வுகளை அளித்ததாகவும் மக்கள் அதனை முறையாக பின்பற்ற தவறுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தேவையான, விழுப்புணர்வு உள்ளிட்ட அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், அரசு முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை கையாளவில்லை என குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் துரைமுருகன் மற்றும் இளங்கோவனுடன் ஆலோசனை செய்த பிறகு முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்து விட்டதாகவும் வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் 3,500 உறுப்பினர்கள் காணொளியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

Leave a Reply