குமரி பட்டதாரி இளைஞர் ஒருவர் தமிழகத்தின் இரும்பு மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்…!

குமரிமாவட்டம் நாகர்கோவில் அருகே தாமரை குட்டிவிளை ஊரை சேர்ந்தவர் கண்ணன் இவர் ஒரு பட்டதாரி இளைஞர்.இவரது தந்தை தங்கதுரை ஒரு சாதரண கூலித்தொழிலாளி ஆவார்..தனது கடின விடாமுயற்சியால் சாதனைப்படைத்த குமரியின் இரும்பு தங்கம் கண்ணன் இந்த சாதனை குறித்து அவரே கூறியதாவது.

இரும்பு மனிதன் போட்டி என்பது பளு தூக்கும் போட்டி..வலுதூக்கும் போட்டியின் அடுத்த கட்டம் போன்றது. வெளிநாடுகளில் இந்த விளையாட்டு பிரபலம். இந்தியாவில் இப்போதுதான் வளர்ந்துகொண்டிருக்கிறது. இங்கே உடல் வலிமை பெற்றவர்கள் அதிகம் இருந்தாலும் இந்த விளையாட்டில் காயம் ஏற்படும் சூழல் நிறைய இருப்பதால் பலரும் தவிர்க்கிறார்கள்.

இந்த போட்டியில் லாரி போன்று எடை அதிகம் உடைய வாகனத்தை கயிறு கட்டி 30 மீட்டர் இழுக்க வேண்டும் அதற்க்கு டிரக்புல் என்று பெயர்,அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கி கொண்டு 30 மீட்டர் ஓட வெண்டும் இதற்க்கு மர்ஸ்வாக் என்று பெயர் 100 கிலோ எடை கொண்ட டயரை தூக்கி போட்ட படி 30 மீட்டர் இலக்கை கடக்க வேண்டும்.இதற்க்கு டயர் பிலிட் எனப்படுகிறது.

100 கிலோ மூட்டை தூக்கிக் கொண்டு 30 மீட்டர் ஓட வேண்டும். 200 கிலோ எடை கொண்ட பொருட்களை தூக்குவது இளவட்டக் கல் போன்ற பெரிய கல்லை தூக்குவது போன்ற போட்டிகளும் இடம்பெறும். இவை அனைத்திலும் நம்முடன் போட்டியாளர்களை விட அதிக புள்ளிகள் பெற்று வெற்றி அடைய வேண்டும்.

இப்படி இருக்கும் நிலையிலும் கடின முயற்சியால் எட்டாவது முறையாக தமிழக இரும்பு மனிதனாக தேர்வாகி உள்ளேன். சமீபத்தில் பஞ்சாப்பில் நடந்த தேசிய அளவிலான இரும்பு மனிதன் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று உள்ளேன். அடுத்த ஆண்டு இந்திய இரும்பு மனிதன் பட்டத்தை வென்று உலகளவில் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்பது என் ஆசை.இந்தியாவில் மூன்று ஆண்டுகளாகதான் இந்த போட்டி வந்துள்ளது.

இந்த விளையாட்டை மற்ற விளையாட்டு வீரர்களும் செய்யலாம் ஆனால் அதற்க்கான பயிறச்சியாளர்களை வைத்து கொண்டு செய்யவேண்டும்.எனக்கு சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்த காரணத்தாலும் இந்த விளையாட்டை அதிக அளவு நேசித்ததாலும் தான்.நான் சாதித்தேன் என்று கூறினார்.

மற்றும் நான் பள்ளியில் படிக்கும்போதே உடல் வலுசேர்க்கும் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு எனக்கு உண்டு.கல்லூரியில் படித்தபோது பல்கலைகழக அளவில் தட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளேன். தொடர்ந்து உடலை வலுவாக வைத்து வருவதால் இரும்பு மனிதன் என்ற இலக்கை என்னால் தட்டிப்பறிக்க முடிந்தது. உடல்வலு போட்டியில் எட்டுமுறை தமிழகத்தின் இரும்பு மனிதன் பட்டம் பெற்றும்.

மூன்று ஆண்டுகள் தேசிய அளவில் இரும்பு மனிதன் பட்டம் பெற்று உள்ளேன் 2003 ஜீனியர் ஏசியா ஸ்ட்ராங்மேன் பட்டம் பெற்று உள்ளேன்.2004 ஜீனியர் வேல்டு ஸ்ட்ராங்மேன் பட்டம் பெற்று உள்ளேன் இப்பொழுது 2020 ல் சமீபத்தில் பஞ்சாப்பில் நடந்த தேசிய அளவிளான போட்டியில் மூன்றாவது இடம் வந்துள்ளேன். உத்தராகாண்டில் நான்காவது இடத்திலும் வந்து பட்டம் பெற்று உள்ளேன்.என்னுடைய லட்சியமே வேல்டு ஸ்ட்ராங்மேன் பட்டத்தை வென்று இந்தியாவிற்க்கு பெறுமை சேர்த்து கொடுக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளது.

இதற்கு தமிழக அரசும் இந்திய அரசும் என்னை ஊக்குவித்து அதற்கான வழிமுறை உதவிகளை செய்யவேண்டும் எனவும் கூறினார். எனக்கு உதவியாக இருந்த சரவண சுப்பையா குமரி மாவட்ட உடல் வலு சங்க செயலாளர்,அண்ணாவி ரயில்வே பயிற்சியாளர் போன்றோர் பயிற்சி அளித்திருக்கிறார்கள். ஏராளமான போட்டிகளில் பதக்கங்களை பெற்று கொடுக்க இவர்கள் எனக்கு ஊக்கமாக இருந்துள்ளனர்.

இரும்பு மனிதர் கண்ணன் கயிறு கட்டி 30 மீட்டர் தூரம் இழுக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.அவருடைய கட்டுமஸ்தான உடலால் லாரியை இழுத்து இலக்கை சில நிமிடங்களில் எட்டுகிறார்.மோட்டார் சைக்கிளை அலேக்காக தலைக்கு மேல் தூக்கி தனது பலத்தை நிருபிக்கிறார் 130 கிலோ மரத்தடியை தோளில் தூக்கி வைக்கிறார் 100 கிலோ இளவட்டக கல்லை எளிதாக தூக்கி புல்லரிக்கவைககிறார் அதிக எடையை தூக்கும் போது உடலில் தசைப்பிடிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்க்காக வெளிநாடுகளில் வீரர்கள் அதற்குரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்வார்கள் ஆனால் இரும்பு மனிதர் கண்ணன் அப்படி எதுவும் அணிந்து கொள்வதில்லை.

இவரது தந்தை கூலி தொழிலாளி என்பதால் தேவையான சத்துகள் கிடைக்காமல் அப்போது அவதிப்பட்டிருக்கிறார். கப்பை கிழங்கு, பயறு வகைகள், நேந்திரம் பழம், மீன் போன்றவை இவரது உடலுக்கு வலுவை கொடுத்து இருக்கிறது என்று நினைக்க தொன்ற வில்லை அவருடைய வைராக்கியம் தான் இன்று அவரை இரும்பு மனிதனாக மாற்றியுள்ளது.

டபிள்யூ டபிள்யூ இ எனப்படும் குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடும் ராக் என்பவர்தான் இவரது ரோல்மாடல். அவரது உடலை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்.அதே உடல் கட்டை நானும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக கடுமையாக உழைத்தேன். தற்போது என்னை பார்ப்பவர்கள் நானும் ராக் போல் கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை பற்றி இருப்பதாக சொல்கிறார்கள்.

நாம் மற்றவர்களைவிட எப்போதும் திறமைசாலியாக இருக்க வேண்டும்.என்ற எண்ணத்தை செயல் ஆக்கியதால் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னால் தான் இந்த உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறேன். என்னை போல் பலபேர் இந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு போதிய வருமானம் இல்லாதாதலும் அதற்க்காக அரசு ஊக்கம் அளிக்காத காரணத்தாலும் அவர்களால் சாதிக்கமுடியவில்லை எனவே சர்வேதேச அளவில் உள்ள இந்த இரும்பு மனிதன் போட்டியை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும் எனவும் அதற்க்கான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என்பதே என் கோரிக்கை.

என்னை போன்ற வீரர்களை தமிழக அரசு ஊக்கவிக்க வேண்டும் தமிழகத்தில் நான் ஒருவன் மட்டும் தான் இரும்புமனிதன் என்ற பட்டத்தை பெற்று உள்ளேன்.என்னை போல் நிறைய இளைஞர்கள் அதற்க்கான வழிமுறைகள் தெரியமாலும் சர்வேதேச போட்டிகளில் எப்படி கலந்துகொள்ளவது என நெறிமுறைகளை தெரியமாலும் இருக்கின்றனர்.எனவே தமிழக அரசு விளையாட்டு துறையும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்

Leave a Reply