கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடரும் மழையால் மக்களின் சகஜ நிலை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிவடைந்து, வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதன் தாக்கமாக கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழையும் சில நேரங்களில் கன மழையும் பெய்தது. இந்நிலையில் இன்று காலை திடீரென மழை துவங்கி தொடர்ந்து பெய்தை வருகிறது. இதனால் மக்களின் சகஜ நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருந்த முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இன்று பொதுமக்கள் சகஜமாக அதிகாலை முதல் நடமாடிய நிலையில், இன்றைய மழை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. பேருந்துகளில் பயணம் செய்ய வந்த பயணிகள் மழையால் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

Leave a Reply