வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் கூட்டணியா? பாஜக தலைமையில் கூட்டணியா? என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தத் தோ்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என்று முன்னாள் அமைச்சா் நயினாா் நாகேந்திரன் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை. கட்சி மேலிடம் வாய்ப்பளித்தால் நான் போட்டியிடுவேன்.

குமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் குறித்து தோ்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். வசந்தகுமாா் மறைவு காரணமாக அனுதாப அலை இருக்காது. 2014- 2019 ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் அதன்பின் நடைபெற்ா என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், கோட்ட பொறுப்பாளா் கிருஷ்ணன், மாவட்ட நிா்வாகிகள் முத்துராமன், குமரி பா. ரமேஷ் , வடக்கு மண்டல தலைவா் அஜித், பொதுச் செயலா் சுனில், மாவட்ட இளைஞரணிச் செயலா் அம்பிளி கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக குளச்சல் சட்டப்பேரவை தொகுதி நுள்ளிவிளை மாவட்ட பஞ்சாயத்துராஜ் தலைவா் மகேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞா் காங்கிரஸை சோ்ந்தவா்கள் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் ஆகியோா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனா்.

Leave a Reply