பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பூங்காக்கள் ஜவான்ஸ் குழுவின் சார்பில் சுத்தம் செய்ப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன…!

கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி மற்றும் கரியமாணிக்கபுரம் பகுதிகளிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பூங்காக்கள் ஜவான்ஸ் குழுவின் சார்பில் சுத்தம் செய்ப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூவாயிரத்து 500 வீரர்கள் கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பின் கீழ் பவ்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர். இந்த ஜவான்ஸ் குழுவின் 34வது களப்பணியாக கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி அருகில் உள்ள குளத்தூர் மற்றும் கரியமாணிக்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள இரு பேருந்து நிறுத்தங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதன் அருகாமையில் உள்ள ஒரு பூங்காவை பாராமரித்து அதன் அருகில் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் நாகர்கோவில் மாநாகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உள்பட ஏராளமான ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு மரங்களை நட்டனர். மேலும் சமூக பணிகளில் ஈடுபடும் ராணுவ வீரர்களை ஆணையர் ஆஷா அஜித் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply