பா.ஜ.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் திமுகவில் இணைந்தார்…!

பா.ஜ கட்சியை சேர்ந்த மேலச்சங்கரன்குழி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி புனிதா பாலன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் லட்சுமி ரத்தின குமார், ஷீலா ரவீந்திரன் மற்றும் 50க்கும் மேற்பட்டவர்கள் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ முன்னிலையில் அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்று திமுகவில் இணைந்தனர்.

ராஜாக்கமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் சற்குருகண்ணன், ஊராட்சி செயலாளர் டேனியல் ரஞ்சன் மற்றும் மேலச்சங்கரன்குழி கிளை திமுக செயலாளர் பேரின்பசெல்வன் , எம்.ஜே.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply