நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா வரும் 7 ம் தேதி முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி…!

நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா வரும் 7 ம் தேதி முதல் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதால் தூய்மை பணியாளர்கள் பூங்காவை தூய்மை படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன பார்க்கிங் மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முறை வந்து கொண்டிருக்கிறது.

நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொதுமக்களை வரும் 7 ம் தேதி முதல் அனுமதிப்பதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் மாநகர் நல அலுவலர் கின்சால் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பூங்காவில் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டு உள்ள ஊஞ்சல் போன்றவைகளில் விளையாடுவதற்கு அனுமதி இல்லை. இருமல், காய்ச்சல், சளி உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை.

பூங்காவின் உள்ளே செல்பவர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேன் செய்யப்படும். நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளதை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் பூங்காவை தூய்மை படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Leave a Reply