நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரம் தட்டிக் கேட்ட கணவரை மனைவி கண் முன்பே கொலைவெறி தாக்குதல் நடத்திய கள்ளக்காதலன்…!
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரம். தட்டிக் கேட்ட கணவரை மனைவி கண் முன்பே கொலைவெறி தாக்குதல் நடத்திய கள்ளக்காதலன். சமூக வலைதளங்களில் பரவும் வைரல் வீடியோவால் பரபரப்பு.
குமரி மாவட்டம் நாகர்கோயிலில் அடுத்த வாத்தியார்விளை , மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (29). இவரது மனைவி ராசாத்தி(26). ராசாத்தி அதேபகுதியையை சேர்ந்த சரவணன்(25) என்பவருடன் நெருங்கி பழகிவந்துள்ளார். இதனால் கணவன்,மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 9 மாதங்களாக பார்த்திபன் தனது மனைவி ராசாத்தியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று கள்ளக்காதலன் சரவணனிடம் தனது மனைவி உடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளுமாறு பார்த்திபன் கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் அவரது நண்பர் மிக்கேல் (28 )ஆகிய இருவரும் சேர்ந்து மனைவி ராசாத்தி கண்முன்பே பார்த்திபனை இருசக்கரவாகனத்தில் இருந்து கீழே தள்ளி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த பார்த்திபனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பார்த்திபன் தற்போது சுயநினைவின்றி இருப்பதாக கூறப்படுகிறது.
நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரம். தட்டிக் கேட்ட கணவரை மனைவி கண் முன்பே கொலைவெறி தாக்குதல் நடத்திய கள்ளக்காதலன்#kumari360 https://t.co/5UEC3V19Tm pic.twitter.com/ZAGyuqe8is
— kumari360 (@kumari360) September 5, 2020
மேலும் மனைவி ராசாத்தி முன்னிலையில் பார்த்திபன் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து வடசேரி போலீசார் சரவணன், மிக்கேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.