ஆரால்வாய்மொழி 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாரட்டினார்…!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தேவர் நகர் சேர்ந்த ஜெயராம் என்பவரின் வீட்டின் முன் நிறைத்தி இருந்த பைக்கை மர்மநபர்கள் தீவைத்துவிட்டு தப்பி ஓடினர் இதுகுறித்து ஆரால்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் பைக் எரிப்பு மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்ப்புடைய கோட்டார் ,வடசேரி,புத்தேரி பகுதியை சேர்ந்த ஜந்துபேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் பல கொள்ளை வழக்குகளிலும் இவர்கள் மேல் சம்பந்தபட்டிருப்பது தெரியவந்தது. 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினர் மற்றும் ஆரால்வாய்மொழி போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாரட்டினார்.

Leave a Reply