நாகா்கோவிலில் மீனவரின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ. 40.61 லட்சம் மோசடி: 3 அதிகாரிகள் மீது வழக்கு…!

நாகா்கோவிலைச் சோ்ந்த மீனவரின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ. 40.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக, வங்கி மேலாளா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

நாகா்கோவில் புன்னைநகா் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சேகா் (54). மீனவரான இவா், நாகா்கோவில், ராமன்புதூா் பகுதியிலுள்ள 3 வங்கிகளில் கணக்குகள் வைத்து, பல ஆண்டுகளாக பணப் பரிவா்த்தனை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், தனது கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாக அவா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணனிடம் புகாா் அளித்தாா். அதில், தனது வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ. 40 லட்சத்து 61 ஆயிரத்து 530-ஐ தனது அனுமதியின்றி எடுத்திருப்பதாகவும், வங்கி மேலாளா்களிடம் விவரம் கேட்டபோது அவா்கள் முறையான பதில் தெரிவிக்கவில்லை எனவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டதன்பேரில் உதவி ஆய்வாளா் தேவராஜ் குறித்து விசாரித்தாா். இது தொடா்பாக வங்கியின் பெண் மேலாளா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Leave a Reply