திக்கணங்கோடு ஊராட்சி கூட்டத்தில் தாங்கள் பரிந்துரைத்த நபருக்கு இலவச வீடு வழங்கவில்லை எனக் கூறி வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!

திக்கணங்கோடு ஊராட்சியில் நடைபெற்ற ஊராட்சி கூட்டத்தில் 6 வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு நபருக்கு வீடு வழங்க கேட்டுக் கொண்டனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இலவச வீடு திட்டத்திற்கான பயணிகள் பட்டியலில் அவரை சேர்க்கவில்லை என தெரிகிறது.

அவரது பெயர் ஏற்கனவே பிரதமரின் இலவச வீடு திட்டத்தின் பயனாளிகள் பட்டியலில் இருப்பதால் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படவில்லை என ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது இந்நிலையில் தங்களால் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு இலவச வீடு வழங்கவில்லை எனக் கூறி 6 வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி அலுவலகம் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Leave a Reply