குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் : கலெக்டர்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை யொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த வெடிபொருள் சட்டத்தின்கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் மாதம் 17 ம் தேதிக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள் மனை வரைபடம் ,கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்களுடன் உரிய கணக்கு தலைப்பின் கீழ் அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிம கட்டணம் ரூ .500 பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியதற்கான ரசீதை இணைக்க வேண்டும்.

மனுதாரர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் என்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் என்றால் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ. 20 க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதமும், விண்ணப்பதாரரின் புகைப்படம், முகவரி சான்று உள்ளிட்டவையும் சமர்ப்பிக்க வேண்டும் .

மேலும் நிர்வாக காரணங்கள் முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ம் தேதிக்குள் வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். அக்டோபர் 17 ம் தேதிக்கு பின்னர் இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply