கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு…6 மாதங்களில் தேர்தல் நடத்த வாய்ப்பு..!

மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. வசந்த குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் நிமோனியா காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில், அவர் கடந்த 28ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அஞ்சலிக்கு பிறகு, மறுநாள் நல்லடக்கம் செய்யப்பட்டது. வசந்தகுமாரின் மறைவை தொடர்ந்து அவரது தொகுதியான கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களை தொகுதியை காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply