அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய ஏஐசிடிஇ எதிர்ப்பு என்று வெளியான தகவல் தவறு – அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம்

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே அவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அதுபோன்ற எந்த எதிர்ப்பும் ஏஐசிடிஇ தெரிவிக்கவில்லை என்றும், அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லை என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார்.

மேலும், அண்ணா பல்கலை துணை வேந்தர் தனது கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக கூறி வருகிறார்.

பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களை ஆல் பாஸ் செய்தற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு என்று வெளியான தகவல் தவறானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply