2020 ஆம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் தொடக்கத்தில் நாம் நினைத்தோமா?- பிரதமர் மோடி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப். எனப்படும் அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் கூட்டமைப்பு சார்பில் இந்திய அமெரிக்க லீடர்ஷிப் மாநாடு நடைபெற்றுவருகிறது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளான இன்று இரவு 9 மணிக்கு மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “2020 ஆம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் தொடக்கத்தில் நாம் நினைத்தோமா?. கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் இந்தியர்களின் உழைப்பு மற்றும் நம்பிக்கை பாதிக்கவில்லை. நமது பொருளாதார அமைப்பு, சுகாதார அமைப்பை கொரோனா சோதித்து பார்க்கிறது. இந்தியாவில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும். இந்தாண்டு மட்டும் 20 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது.” எனக் கூறினார்.

Leave a Reply