நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம்…!

குமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுகுடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் லாரி உரிமையாளர்கள் சங்கம், கோட்டார் வர்த்தக சங்கம் மற்றும் அப்டா மார்க்கெட் வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுடன் ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள், நாகர்கோவில் RDO திருமதி. மயில் அவர்கள், நாகர்கோவில் DSP திரு. வேணுகோபால் அவர்கள் மற்றும் நாகர்கோவில் போக்குவரத்து ஆய்வாளர் திரு. அருண் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

நாகர்கோவில் நகருக்குள் கனரக சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.

காவல்கிணறில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக மாவட்டத்தின் மேற்குப் பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்களும் அதேபோல் மேற்குப் பகுதியிலிருந்து ஆரல்வாய்மொழி வரும் கனரக வாகனங்களும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நுழையாமல் செண்பகராமன்புதூர், துவரங்காடு, தடிக்காரன்கோணம், குலசேகரம் வழியாக செல்ல வேண்டும் அல்லது செண்பகராமன்புதூர், துவரங்காடு, இறச்சகுளம், களியங்காடு வழியாக செல்ல வேண்டும்.

காவல்கிணற்றில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு செல்லும் கனரக வாகனங்கள் காவல்கிணறு, அஞ்சுகிராமம், வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி, ஈத்தாமொழி ரோடு வழியாக செல்லும், அதே போல் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து அருள்மொழி செல்லும் கனரக வாகனங்களும் இதே மார்க்கத்தில் செல்லவும் வேண்டும்.

கோட்டார் மார்க்கெட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள் இறக்க வரும் கனரக வாகனங்கள் காவல்கிணறு, அஞ்சுகிராமம், வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி வழியாக உள்ளே வரவும் வெளியே செல்லவும் வேண்டும்.

இந்த போக்குவரத்து மாற்றம் 04-09-2020-ம் தேதி நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு அமல்படுத்தப்படுகிறது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply