நாகர்கோவிலில் குழைந்தை பிறக்காததால் குறையாக பலர் கிண்டல் செய்த வேதனையில் இளைஞர் தற்கொலை…!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 33 வயதாகும் இவர் பெயிண்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் இவருக்கு சுதா என்ற மனைவியும் உள்ளார் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தைகள் இல்லை இதனால் உறவினர்கள் நண்பர்கள் என குழந்தை பிறக்காது அதை குறையாக கூறி அவ்வப்போது கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் மனவேதனையில் காணப்பட்ட சதீஷ்குமார் மனைவி சுதா தனது தாயார் வீட்டிற்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தற்கொலை செய்வதற்கு முன்பாக வீட்டின் உள் சுவரில் தனது வேதனையை வெளிப்படுத்தும் வகையில் எழுதி வைத்துள்ளார்.

தனக்குப் பிடித்த தந்தையே தனக்கு மகனாக பிறக்க விரும்பியதாகவும் குழந்தை பிறக்காததால் குறையாக நண்பர்களும் உறவினர்களும் குறைகூறி வந்ததாகவும் இதனால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்வதாக சுவர் எழுத்தில் குறிப்பிட்டுள்ளார் சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற கோட்டார் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வு அனுப்பியதோடு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply