திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் இன்று மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் சட்ட பேரவை தேர்தலுக்க இன்னும் 7 மாதம் உள்ளது. இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் களம் காண தீவிரம் காட்டி வருகின்றனர். உறுப்பினர் சேர்க்கை , கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என அரசியல் களம் சூடுப்பிடிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் இன்று காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். செப்டம்பர் 9ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வாக உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.

Leave a Reply