குமரி மாவட்டம் நாக்கால்மடம் பகுதியில் தவறான உறவுக்கும் அழைத்ததாக பத்திரிக்கையாளர் என கூறியவர் மற்றும் ஒருவர் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாக்கால்மடம் பகுதியில் சாலையோரம் பழக்கடை நடத்தி வரும் பெண்ணிடம் குடிபோதையில் இலவச பழங்கள் கேட்டு பிரச்சனை செய்ததோடு தவறான உறவுக்கும் அழைத்ததாக பத்திரிக்கையாளர் என கூறியவர் மற்றும் ஒருவர் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்தவர் பழக்கடை நடத்தி வரும் ஜெயசுஜி (30). இவர் நாக்கால்மடம் பகுதியில் சாலையோரம் பழக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த இருவர் குடிபோதையில் பத்திரிக்கையாளர் (கடல்சிற்பி) என கூறி இலவசமாக பழங்கள் கேட்டதோடு தகாத வார்த்தைகளால் பேசி தவறான உறவுக்கும் அழைத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த.

பழகக்கடை பெண் கூச்சல் போடவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தார்கள். தகவல் அறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலிஸால் இருவரையும் பிடித்து விசாரனை செய்ததில் பொய்கை நகர் பகுதியை சேர்ந்த கடல் சிற்பி பத்திரிக்கை நிருபர் என அடையாள அட்டை வைத்து இருந்த சுரேஷ்பானுசுந்தர் மற்றும் அவரது நண்பர் கணேஷன் ஆகியோர் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இருவர் மீதும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply