குமரி மாவட்டத்தில் மினி பஸ்கள் ஓடத் துவங்கியது…!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ்கள் இயக்கப்படவில்லை. அதனால் மினி பஸ்களும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வந்த மினி பஸ்கள் அனைத்தும் இயக்கப்படவில்லை. அதேநேரத்தில் ஒருசில மினி பஸ்கள் இயக்கத்தை துவங்கி உள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த மினி பஸ்கள் தற்போது ஓடத் துவங்கி உள்ளதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மினி பஸ்களில் 20 சதவீதம் பஸ்களே இயக்கப்பட்டு உள்ளதாக மினி பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply