கீரிப்பாறை அருகே மாணவி கற்பழிப்பு…தொழிலாளிக்கு வலைவீச்சு…!

கீரிப்பாறை அருகே உள்ள பால்குளம் ஈட்டிமூடு பகுதியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 35) என்பவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அங்கு தங்கி இருந்து, பால் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்தார்.

அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர் தன் வீடு அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ராஜேஷ், திடீரென்று அந்த மாணவியின் தலையில் தாக்கினார். பின்னர் மாணவியை தன் வீட்டுக்கு தூக்கி சென்றார்.

அங்கு வைத்து மாணவியை கற்பழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் ராஜேஷ் தலைமறைவாகி விட்டார். இதனால் அந்த மாணவி அழுது கொண்டே சென்று தன் பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியை மருத்துவ பரி சோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ் பெக்டர் உமா விசாரணை நடத்தி, தலை மறைவாக உள்ள ராஜேசை வலைவீசி தேடி வருகிறார்.

Leave a Reply