ஈரோடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் 4 பேர் பலி…!

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பொது போக்குவரத்து கடந்த 5 மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் 161 நாட்களுக்கு பின் மீண்டும் 1 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்தை அரசு துவக்கியுள்ளது. இதனால் மக்கள் ஆர்வமுடன் பேருந்துகளில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு அருகே லக்காபுரம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

இருசக்கர வாகனங்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த நகரப் பேருந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் அரசு பேருந்து சேவை தொடங்கிய நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

Leave a Reply