முகிலன்விளையில் புதிய ரேஷன் கடை கட்டிடம் ஆஸ்டின் எம்எல்ஏ திறந்து வைத்தார்…!

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தெங்கம்புதூர் பேரூராட்சி முகிலன்விளையில் புதிய ரேஷன் கடை கட்டிடம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் ஆஸ்டின் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, புதிய ரேஷன் கடை கட்ட ஆஸ்டின் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹5 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இந்த நிலையில் கட்டிட வேலைகள் முடிந்து திறப்பு விழா நடந்தது. ஆஸ்டின் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன் , முகிலன்விளை கூட்டுறவுச் சங்க தலைவர் சிவானந்தன், செயலாளர் முருகன்

மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜ கோபால் , தெங்கம்புதூர் பேரூர் பொறுப்பாளர் சண்முகராஜன் , வாசமுத்து, ராஜேந்திரன், ஆசிரியர் ராதாகிருஷ்ணன், குமார் , முகிலன்விளை கூட்டுறவுச் சங்க இயக்குநர் ராஜகிளி , சொர்ணம், பொன்ரேவதி ஆதிமூலம், கோபால் ஜி , கங்காதரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply