மார்த்தாண்டத்தில் H.ராஜாவின் உருவ பொம்மையை எரிப்பு… காங்கிரஸார் மீது வழக்கு…!

பா.ஜ., தேசிய செயலாளர் ராஜாவின் உருவ பொம்மையை எரித்த காங்., கட்சியினர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்., கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து, பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறி,

மார்த்தாண்டம் புதிய பஸ் ஸ்டாண்ட் முன் காங்., கட்சியினர் ராஜாவின் உருவபொம்மையை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட காங்., கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply