நாகர்கோவிலில் கூட்டுறவு சங்கத்தில் கபசுர குடிநீர் வினியோகம்

நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் செயல்படும் இ-சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள், உறுப்பினர்களுக்கு சங்கம் சார்பில் தினமும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

இதன் தொடக்க விழாவில் கூட்டுறவு சங்க தலைவர் நாகலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமணன் பிள்ளை வரவேற்று பேசினார். மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், பணியாளர்களுக்கு கையுறை, முககவசம் வழங்கினார். மேலும், உறுப்பினர்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் குமார், செயல் தலைவர் தவசி ஆசாரி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ராமசாமி, முருகன், பாலகிருஷ்ணன், ரமணி, தங்கவேல், முருகபெருமாள், சங்க பணியாளர்கள் லதா, மெரினா, கணினி இயக்குபவர் உஷா, கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

Leave a Reply