தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குமரிமாவட்ட சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை…!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆறு தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குமரிமாவட்ட குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை எழுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

பிரதமரின் விவசாயிகளுக்கு நிதிஉதவி வழங்கும் திட்டத்தில் பாஜ ஊடுருவலை தவிர்க்கக் கேட்டும், தமிழகம் முழுவதும் 2000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதை சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் எனவும், குற்றவாளிகள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குளம் விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார், அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய ஆறு தாலுகா அலுவலகம் முன் கோரிக்கை எழுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

கல்குளம் தாலுகா அலுவலகம் முன் நடந்த நிகழ்ச்சிக்கு சின்னதம்பி தலைமை தாங்க அரங்கசாமி, ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறுமுகம்பிள்ளை துவக்கி வைத்தார். சுஜா ஜாஸ்பின் முடித்து வைத்தார். இதில் வேலப்பன், முரளிதரன், ஐயப்பன்பிள்ளை, நல்லதம்பி உட்பட பலர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply