கொரோனா காலத்தை 20 அழகிகளுடன் கழிக்கும் தாய்லாந்து மன்னர்..!

தாய்லாந்து மன்னரான மகா வாஜிராலோங்க் கோர்ன் தற்போது கொரோனா காலத் தனிமையை ஜெர்மனியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அனுபவித்து வருகிறார். கொரோனா பரவலில் இருந்து மன்னரைப் பாதுகாக்க இந்த ஏற்பாடு எனக் கூறப்படுகிறது. ஆனால் மன்னர் தனிமையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடன் 20 அழகிகள் மற்றும் வேலையாட்களும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள சிறையில் இருந்து சினீனாட் (35) என்பவர் விடுதலை செய்யப்பட்டு ஜெர்மனிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். சினீனாட்டை மன்னரே நேரில் வந்து வரவேற்றதாகவும் கூறப்படுகிறது.

68 வயதாகும் மன்னர் வாஜிராலோங்க் கடந்த பிறந்த நாள் அன்று தனது துணைவியாக ஒருவரைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் துணைவியாக ஒருவரை மன்னர் குடும்பம் தேர்ந்தெடுத்து இருப்பது குறித்து பலரும் அப்போது மகிழ்ச்சி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தேர்தெடுக்கப் பட்டவர் ஏற்கனவே மன்னரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர். அவர் பெயர் சினீனாட் வோங் வாஜிராங்லோங்க்.

துணைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சினீனாட் வெறுமனே 3 மாதங்களில் சிறையில் தள்ளப்பட்டார். காரணம் துணைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராணியாக ஆசைப்படுகிறார். மேலும் மன்னருக்கு விசுவாசமற்ற முறையில் நடந்து கொள்கிறார். அரண்மனையின் செயல்பாடுகளுக்கு இவரது நடவடிக்கைகள் பிடிக்கவில்லை எனப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது கொரோனா காலத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் மன்னர் சிறையில் உள்ள சினீனாட்டை மன்னித்து அழகிகள் குழுவுடன் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்து இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட சினீனாட் தாய்லாந்து சிறையில் இருந்து விடுதலைப் பெற்று தற்போது மன்னருடன் இணைந்திருக்கிறார். ஜெர்மனியில் நிலவரம் இப்படியிருக்க மன்னரின் 4 ஆவது மனைவி கதிடா தற்போது கொரோனா பேரிடர் காலத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கழித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply