குமரி மாவட்ட கட்டுமான வல்லுனர் நலன் மற்றும் அறக்கட்டளை சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடம்…!

கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான வல்லுனர் நலன் மற்றும் அறக்கட்டளை சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் நடந்த ஓணம் பண்டிகை கொண்டாடத்துக்கு செயலாளர் சிவச்சந்திரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ராஜூவ் வரவேற்றார். அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் பாரத் வில்சன் ஓணம் கொண்டாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

பொருளாளர் ஜாண்சன் தயான், செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், சில்வாரியஸ் வினோ, ஜெயகுமார் உறுப்பினர் ஜோசப், ஜெயகுமார் சுரேஷ் கலந்து கொண்டனர். அத்தப்பூ கோலம் போட்டு ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் வெர்ஜின் சாமுவேல் நன்றி கூறினார்.

Leave a Reply