கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனா மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் உள்ளது தினமும் 150 மேல் பாதிக்கபடுகின்றனர். அரசு அதிகாரிகள், மருத்துவர்கள்,செவிலியர்கள் ,காவல்துறை சேர்ந்தவர்கள் என தினமும் அதிகளவில் நோயாளிகள் மருத்துவமனையை நாடி சென்ற வண்ணம் உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் இதை கட்டுப்படுத்த பல வழிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன ஆனால் இதுவரைக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை மேலும் சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் தமிழக அரசு கொரோனா வார்டு அமைக்க அனுமதி கொடுத்த நிலையில் நாகர்கோவில் அருகேயுள்ள கோட்டார் சாலையில் அமைந்துள்ள சிவா மருத்துவமனையில் பொதுமருத்தும் நடைபெற்றுவந்தது.

தற்போது இந்த மருத்துவமணை முழுவதும் கொரோனா வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க கொரோனா மருத்துவமனையாக மாற்றம் செய்து அதற்க்கான புதிய கருவிகளையும் மருத்துவமனையிலும் பொருத்தி உள்ளனர். இந்த கொரோனா மருத்துவமனை குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தலைவர் டாக்டர். சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா நோய் தொடர்பாக அச்சம் கொள்ளவேண்டாம். காசநோய், விபத்துக்கள் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒப்பிடுகையில் நமது நாட்டில் கரோனா உயிரிழப்புக்கள் மிகமிகக் குறைவாக உள்ளது. இதனை தொடக்க நிலையிலேயே நோயின் அறிகுறிகளை உணர்ந்து உடனடியாக பரிசோதனை செய்து கொண்டால் ஒரு வாரத்தில் நிச்சயம் குணம் அடைந்து விடலாம். நாகர்கோவிலில் உள்ள சிவா மருத்துவமனையில் தற்போது கொரோனா சிகிச்சை பிரிவு தொடங்கப் பட்டுள்ளது.

இங்கு எம்பிபிஎஸ் டாக்டர்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் கொரோனா நோயாளிகளை கண்காணிக்கும் வகையில் செவிலியர்கள் மற்றும் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.டாக்டர்கள் நோயாளிகளை முதல் நிலை, இரண்டாம் நிலை என பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆக்சிஜன் தெரபி தேவைப்படுகிறவர்களுக்கு இரண்டாம் நிலைக்கு வருகிறார்கள்.

இதற்காக போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெண்டிலேட்டர் கள் உள்ளன.கொரோனா வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு 18 வகையான பொருள்கள் கொடுக்கப்படுகின்றன. இதை அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது உடன் கொண்டு செல்லலாம். கொரோனா வார்டுக்குள் டாக்டர்கள், செவிலியர்கள் செல்ல பிரத்தியோக ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆடை கொடுக்கப்படுள்ளது.

மருத்துவ பணியாளர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பேட்டியின் போது மருத்துவர்கள் நாகராஜன், அபிலாஷ் அருண் வர்க்கிஸ், அருண் முகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply