நாகர்கோவில் ரூ.57 லட்சத்தில் சாலை பணியை ஆஸ்டின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…!

நாகர்கோவில் மாநகராட்சி 29வது வார்டுக்கு உள்பட்ட ஐஎஸ் இடி நகர் தெற்கு, ஐ எஸ் இடி நகர் வடக்கு, பிஸ்மிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்கள் ஆஸ்டின் எம்எல்ஏவை நேரில் சந்தித்து பழுதான சாலைகளை செப்பனிடவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று மேற் கொண்ட நடவடிக்கையால் ஐஎஸ் இடிநகர் நடக்கு சாலையை சீரமைக்க ரூ.18 லட்சம், ஐஎஸ் இடி தெற்குநகர் சாலையை சீரமைக்க ரூ.18 லட்சம், பிஸ்மி நகர் சாலையை சீரமைக்க ரூ.21 லட்சம் என ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த சாலை பணியை ஆஸ்டின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷ், 29வது வார்டு செயலாளர் விஜயகுமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாக்தாத், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் அகஸ்தீசன், ஐஎஸ் இடி நகர் ஜமாத் தலைவர் ஜாகிர் உசேன், நகர இலக்கிய அணி தலைவர் ராஜா, சிடிஎம் புரம் ஊர் தலைவர் ஜெயவிக்ரமன், ஐ எஸ் இடி நகர் ஜமாத் நிர்வாகிகள் முகம்மது தாஹா, ஹைதர் அலி, அப்துல் வகாப், ரசீன், சபீர், ஆதின், இக்பால், சம்சீர், ஹனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply